அரசியல்தமிழ்நாடு

திமுக மக்களைத் திசை திருப்ப முயல்கிறது… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்…

வெள்ளை அறிக்கை வெளியிட்டு திமுக மக்களை திசை திருப்புவதாக என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து மக்கள் அறியும் வகையில் வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். வெள்ளை அறிக்கை வெளியிடுவது, திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதற்கல்ல என்றும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து அதிமுக ஆட்சி குறித்து அடுக்கடுக்கான புகார்களை வெள்ளை அறிக்கை வாயிலாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். ஆகஸ்ட் 13 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது, முன்னதாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

திமுக தனது தேர்தல் காலத்தில் ஏகப்பட்ட வாக்குறுதிகள் கொடுத்துள்ளார்கள் அதை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில், இதுபோன்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்து, பழிபோடும் செயலாக உள்ளது என்றார். பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, மக்களை திசை திருப்பும் வேளையாகத்தான இதை பார்க்க முடிகிறது. அதிமுக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால், திமுக உயர்த்தப் போவதாக சொல்கிறதா? என்றும் திமுக அரசு விட்டுச் சென்ற கடனுக்கும் அதிமுக அரசுதான் வட்டி கட்டியுள்ளதாக ஜெயக்குமார் கூறினார்.