Uncategorized

வெள்ளை அறிக்கை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்…

தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

திமுக தலைமையிலான அரசு, பொறுப்பேற்ற பின் சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, ஆளுநர் உரையில் நிதிநிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கைவெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன், வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

கடந்த 10 வருட அதிமுக ஆட்சி காலத்தில் அரசின் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகைகள், கடன்களின் நிலை, மாநிலத்தின் வளர்ச்சி உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள், விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதிமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சரின் செயலாளர்கள் தெரிவித்த திருத்தங்கள் இடம் பெற்றுள்ளன. வெள்ளை அறிக்கை தயாரிப்பதற்காக, ஆந்திரம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்யிட்ட வெள்ளை அறிக்கைகளும் ஆய்வு செய்யப்பட்டதாக கூறினார்.

2001 ஆம் ஆண்டு பொன்னையன் வெள்ளை அறிக்கயை ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதில் துறை ரீதியாக தகவல் எதுவும் இல்லை என்றார். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வெள்ளை அறிக்கையில் துறை ரீதியாக தகவல்கள் இடம் பெற்றிருக்கும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.