அரசியல்

“கழகத்தின் தூண் சரிந்ததே”… மதுசூதனன் மறைவுக்கு ஓபிஎஸ் – ஈபிஎஸ் இரங்கல்…

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இயக்கத்தின் தொடக்கநாள் முதல் இறுதி வரை ஓயாது உழைத்த கழக உடன்பிறப்பு மதுசூதனன் என்றம், தொண்டர்களை எப்பொழுதும் தன் தோள்களில் வைத்து கொண்டாடிய அதிமுகவின் வேர்களில் ஒருவர் என புகழாரம் சூட்டியுள்ளனர்.

கழகத்தின் தூண் சரிந்தே என கண்ணீர் கடலில மூழ்கிய நமக்கு யார் ஆறுதல் சொல்வார் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மதுசூதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது உற்றார் உறவினர்களுக்கும் இந்த துயரத்தைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும் தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் ஒன்றரை கோடி கழகத்தின் சார்பிலும் என் சார்பிலும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக அறிக்கையில் கூறியுள்ளனர்.

மதுசூதனன் மறைவையொட்டி, ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அதிமுக கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.