தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்..!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,997 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 33 பேர் உயிரிழந்து உள்ளனர். 1943 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் மட்டும் 1, 58,797 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப் பட்டன. அதில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 1997 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,69,398 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,82,11,132 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,164 பேர் ஆண்கள், 833 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,00,941 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,68,419 ஆகவும் அதிகரித்து உள்ளது. 1,943 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,15,030 ஆக உயர்ந்துள்ளது. 33 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 5 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 28 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,230 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
