சட்டசபையில் தனது இருக்கைக்கு பின் பக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படம் திறக்கப்பட்டுள்ளது..! ட்விட்டர் பதிவு மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா…
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் சட்டசபையில் நேற்று திறந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
சபாநாயகர் அப்பாவு. முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அதிமுக தலைவர்கள் மட்டும் பங்கேற்வில்லை.
சட்டசபையில் ஏற்கெனவே பல தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படமும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்திற்கு கீழ் `காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது’ என்கிற வாசகம் வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி இந்த வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் மன்னார்குடி எம்எல்ஏவான திமுகவைச் சேர்ந்த டிஆர்பி ராஜாவின் பின் பக்கத்தில் தான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ள டிஆர்பி ராஜா எம்எல்ஏ அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து டிஆர்பி ராஜா தனது பதிவில் ஒரு படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் வைக்கப்பட்டுள்ள இடத்தை ஒட்டி 2011ல் கடைசியில் அமர்ந்து இருந்தையும். 2016ல் இரண்டாவது வரிசையில் அமர்ந்து இருந்ததையும், 2021ல் அதற்கு முன்னதாக முதல் வரிசையில் அமர்ந்து உள்ளதையும் டிஆர்பி ராஜா சுட்டிக்காட்டி உள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் தனது இருக்கையின் அருகிலேயே எப்போதும் இருக்க வேணடும் என்றும் அவர் உருக்கமாக ட்விட்டரில் கூறியுள்ளார்.
