ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை இல்லை… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து, கடந்த ஆண்டு தமிழக அரசு சட்டம் இயற்றியது. தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆன்லைன் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஆன்லைன் விளையாட்டில் திறமை அடங்கியிருப்பதாகவும், சூதாட்டம் இல்லை என்றும் வாதிட்டனர். ஆன்லைன் விளையாட்டால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும் இதனால் தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், பொது நலன் கருதியே இந்த சட்டம் இயற்றப்பட்டதாகவும் தமிழக அரசு சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஒத்தி வைத்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டம், போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி சட்டத்தை ரத்து செய்வதாகவும், உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.. உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு எந்த தடையும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
