அரசியல்தமிழ்நாடு

சசிகலாவால் மட்டுமே அதிமுகவைக் காப்பாற்ற முடியும்: புகழேந்தி

சசிகலாவால்தான் அதிமுகவை காப்பாற்ற முடியும் என்று முன்னாள் நிர்வாகி புகழேந்தி கூறியுள்ளார். திமுக இல்லையென்றால் திராவிட இயக்கத்தைக் காப்பாற்ற முடியாத நிலை உள்ளதாகவும் புகழேந்தி கூறினார்.

சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை, புகழேந்தி சந்தித்துப் பேசினா. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, தன்னுடைய தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்ற அப்பாவு, சபாநாயகராக ஆகியிருப்பதால் வாழ்த்து தெரிவிக்க வந்ததாக கூறினார்.

சசிகலாவால்தான் அதிமுகவைக் காப்பாற்ற முடியும் என்றும், திராவிட இயக்க சிந்தனையில் என் செயல்பாடு இருக்கும் என்றும் புகழேந்தி கூறினார். சசிகலா அழைத்தால் நேரில் சந்திக்க தயாராக இருப்பதாக கூறிய அவர், திமுக இல்லையெனில் திராவிட இயக்கத்தை காப்பாற்ற யாரும் கிடையாது என்றும் திராவிட இயக்க சிந்தனையுடைய தனது முடிவை விரைவில் அறிவிப்பேன் என்றார்.