Uncategorized

5 குழந்தைகளுக்குமேல் பெற்றால் ரூ.1500 உதவித்தொகை… கேரளாவில் அதிரடி அறிவிப்பு…

கேரளாவில் 5 குழந்தைகளுக்குமேல் பெற்றால் மாதம் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும், இலவசக்கல்வி, இலவச மருத்துவம் வழங்கப்படும் என்று கேரளாவில் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் சீரோ மலபார் கத்தோலிக்க ஆலயத்தின் பாலா மறைமாவட்டம் ஆயர் ஜோசப் பல்லரங்காட் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த சுற்றறிக்கை அனைத்து ஆலயங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

பாலா மாவட்டத்தில் உள்ள ஆலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கின்ற கத்தோலிக்க குடும்பங்களில் 5 மற்றும் அதற்குமேல் குழந்தைகள் பெற்ற தம்பதிகளுக்கு மாதம் 1500 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்றும், தம்பதிகளுக்கு மறைமாவட்டத்தின்கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் இலவச கல்வியும் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையும் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இலவச கல்வி, இலவச மருத்துவம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாலா மறைமாவட்ட குடும்பநல இயக்க பாதிரியார் ஜோசப் குற்றிங்கல், கேரளாவில் கத்தோலிக்ர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கேரள மாநிலத்தில் 18.38 சதவிகிதமாக இருந்த கத்தோலிக்கர்கள் இப்போது 14 சதவிகித மட்டுமே உள்ளனர். அதனால்தான் கத்தோலிக்கர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக இந்த உதவிகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.