முதல் நாளே இந்தியாவின் பிரசாகம் ஆரம்பம்… வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…
டோக்கியோ ஒலிம்பிக் பளூ தூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், பெண்களுக்கான பளுதூக்குதல் 49 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா தனது முதல் பதக்கத்தை பதிவு செய்துள்ளது. இதையடுத்து, டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. பளு தூக்கும் வீராங்கனை மீராபாயின் சாதனையைப் பாராட்டி பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள், வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீராபாய் சானுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது கறித்து அவர் தனது டுவிட்டரில், ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான ஆரம்பம் என்றும் மீராபாய் சாணுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
