அரசியல்தமிழ்நாடு

ஜெ.ஜெயலலிதா பல்கலைகழகத்துக்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும்… உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மனு…!

அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு, நிதி ஒதுக்கக்கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாணவர்கள் நலனுக்காக வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

இந்த பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கக்கோரியும், பதிவாளரை நியமிக்கக் கோரியும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் பல்கலைக்கழகத்துக்கான துணை வேந்தர் நியமிக்கப்பட்டு, பல்கலைக்கழக கட்டுமானத்துக்காக விழுப்புரம் மாவட்டம், செம்மேடு கிராமத்தில் 70 ஏக்கர் நிலம் கடந்த அதிமுக அரசால் ஒதுக்கப்பட்டது. தற்போதைய அரசின் புறக்கணிப்பால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுக்கா அலுவலகத்திலேயே செயல்படுகிறது. பேல்கலைக்கழகத்துக்கு இதுவரை பதிவாளரும், போதுமான பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. இதனால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முதுகலை மையத்தில் முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்டத்தை மீறிய செய்ல என்றும் அந்த அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.