அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை… ஜெயக்குமார் கடும் கண்டனம்…
அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சசிகலா காரில் அதிமுக கொடி கட்டி செல்வதை ஏற்க முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக அவைத் தலைவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக, சசிகலா தனது காரில் அதிமுக கொடியுடன் மருத்துவமனைக் சென்றது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டிருந்த அவரை சந்திப்பது என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம்தான் என்றும் இது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்றார். ஆனால் காரில் எப்படி அவர் அதிமக கொடி கட்டிச் செல்லலாம்? அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பந்தம் இல்லாமல் எப்படி அதிமுக கொடியை கட்டிக் கொண்டு செல்ல முடியும் என கேள்வி எழுப்பினார். அதிமுக கொடி கட்டுவதற்கு சசிகலாவிற்கு எந்த உரிமையும் கிடையாது என்றார்.

மேலும் பேசிய அவர், தனியார் தொலைக்காட்சிக்கு சசிகலா பேட்டி அளித்து அவரே மாட்டிக் கொண்டதாகவும், அதிமுக ஜானகி – ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜானகி அம்மாள், எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி என்னால் பிரியக்கூடாது, என்றும் கட்சிதொடர்ந்து இயங்க வேண்டும் என்றம் கூறி விலகி கொண்டதாக கூறியுள்ளர். அதை சொல்லும் சசிகலா, அதேபோன்று அதிமுகவை விட்டுவிட்டுச் செல்லட்டும். உங்களைப் பாராட்டுவார்கள். சசிகலா பெருந்தன்மையானவர் என்ற பெய்ர எடுத்துக்கொண்டு போங்கள்… எதற்கு குறுக்கிடுகிறீர்கள் என்றார்.
மேலும் அண்ணா வழியில் வந்த இயக்கம் இன்று நன்றாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அமமுக கட்சிஒரு பக்கம் நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேச்சு என சசிகலா குழப்பம் செய்து கொண்டிருப்பதாக ஜெயக்குமார் கூறினார். உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை சட்டமன்றத்தில், சட்ட அமைச்சர் தனது அறையில் மாட்டியது விதிமீறலாகும் என்றம் சட்ட அமைச்சர் தன் பூஜை அறையில் வேண்டுமானால் உதயநிதி படத்தைவைத்து பூஜை செய்யட்டும் அதை நாங்கள் எதிர்க்கப்பவதில்லை என்றும் ஜெயக்குமார் கடுமையாக கூறினார்.
