தமிழ்நாடு

சென்னையில் ‘மாஸ்க்’ அணிபவர்களின் எண்ணிக்கை உயர்வு… ஐசிஎம்ஆர் தகவல்…

சென்னையில் முகக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக ஐசிஎம்ஆர் மற்றும் சென்னை மாநகராட்சி நடத்திய கள ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று பரவலுக்கு தீர்வாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய – மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொரோனா மூன்றாவது அலை விரைவில் உருவாகும் என்று கூறப்படும் நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்றும் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சுகாதார துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

முகக்கவசம் அணியும்போது, மூக்கு மற்றும் வாயை மூடாமல், வாயை மட்டும் மூடுவது, தாடை பகுதியில் முகக்கவசத்தை வைத்துக் கொள்வது, சட்டை பாக்கெட்டி முகக்கவசத்தை வைத்துக் கொள்வது என பொதுமக்கள் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்திற்குப் பின்னர் முகக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக ஐ.சி.எம்.ஆர் மற்றும் சென்னை மாநகராட்சி நடத்திய கள ஆய்வில் வெளியாகி உள்ளது.