இந்தியாவிலேயே சிறந்த முதல்வர்கள் பட்டியலில் ஸ்டாலினுக்கு முதலிடம்… உதயநிதி பெருமிதம்…
இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் முதலிடம் வகிப்பதாக திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பெருமைபட தெரிவித்தார். சென்னை, ஆவடியில் ஆவடியில் அமைச்சர் நாசர் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற தொகுதி அலுவகலம் திறப்பு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அப்போது தொண்டர்களிடையே பேசிய அவர், கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்றார். இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் யார் என்பது குறிர்து ஓர்மக்ஸ் வாக்கெடுப்பு, தனியார் நிறுவனம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது என்றம், இதில் தமிழக முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலின் சிறந்த முதல்வராக முதலிடத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

மாதம் ஒரு முறை நடத்தப்படும் ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டரை மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் சிறந்த முதலமைச்சர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். முன்னதாக பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தையும் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
