Covid19உலகம்

கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…

கொரோனாவின் மூன்றாவது அலையின் ஆரம்ப நிலையை உலகம் சந்திக்க தொடங்கி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் கூறினார். நிரூபிக்கப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகளின் சீரற்ற பயன்பாடு காரணமாக பாதிப்பு மற்றும் இறப்புகள் அதிகரிக்க வழி வகுக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் அதிகரித்ததன் மூலம், கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் குறைந்து வந்த நிலையில், தற்போது கொரோன பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளும் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பது கவலை அளிப்பதாக தெரிவித்தார்.

தற்போது சீராக குறைந்து வந்த கொரோனா பரவல், 10 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்தாகவும், டெல்டா வகை கொரோனா பரவலுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள், தளர்வுகள், சீரற்ற பொது சுகாதார நடவடிக்கைகளை காரணமாக பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

டெல்டா வகை கொரோனா வைரஸ் தற்போது 111-க்கு அதிகமான நாடுகளில் பரவி உள்ளதாகவும், இந்த வகை வைரஸ் விரைவில் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனாவின் மூன்றாவது அலையில், ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறோம் என்றும் உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.