அரசியல்தமிழ்நாடு

நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும்… மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்…

தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார்.

மக்கள் நல்வவாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் குறித்து மத்திய சுகாதார துறைஅமைச்சரை சந்திதுத பேச இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் மத்திய அரசிடம் 13 கோரிக்கைகளை முன் வைக்க உள்ளதாகவும் அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டுக்கு தடுப்பூசி அதிகப்படுத்தி வழங்க வேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன் வைக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

மேலும், நீட் தேர்வில்இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும், எய்ம் மருத்துவ கல்லூரி திறப்பு குறித்தும் எடுத்து சொல்ல இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில், டெல்லியில் மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை, அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திய மனுவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

இதனிடையே மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது டுவிட்டரில், தமிழகத்தில் 4 நகரங்களில் புதிதாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும், அவை செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூரில் அமைக்கப்பட உள்ளதாக பதிவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தெரிவித்ததாகவும் மத்திய அமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.