“உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்”: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி மூலமாக தமிழகம் மூலம் பல லட்சம் மனுக்கள் பெறப்பட்டது. பல்வேறு வித கோரிக்கைகள் மனுக்களாக பெறப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், தனி அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, மனுக்கள் ஆராயப்பட்டன. தற்போது அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காதுகேளாதோருக்கு மிஷின்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் பட்டா கேட்டு மனு செய்தவர்களுக்கு பட்டாக்கள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் 100 நாட்களில் நிவர்த்தி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஆட்சி பொறுப்பேற்று 68 ஆன நிலையில் மனுக்கள் ஆராயப்பட்டு, கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின்கீழ் இதுவரை 65 ஆயிரம் மனுக்கள் தீர்வுகாணப்பட்டுள்ளன. தற்போது 68 நாட்கள் ஆன நிலையில் இன்னும் 30 நாட்களே உள்ளது. இந்த பணிகளை மேலும் துரிதப்படுத்தும் வகையில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
