அரசியல்தமிழ்நாடு

“அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பிறகு பார்க்கலாம்” … கொங்குநாடு குறித்து முன்னாள் அமைச்சர் கருத்து…

தமிழ்நாட்டை பிரித்து கொங்குநாடு என்ற தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அத்தைக்கு மீசை முளைக்கட்டு; பிறகு பார்க்கலாம் என கூறியுள்ளார்.

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் மத்திய இணை அமைச்சராக எல். முருகன் குறித்த விவரக் குறிப்பில், கொங்கு நாடு என்று இடம் பெற்றது. இதன் தொடர்ச்சியாக கொங்குநாடு சர்ச்சை அரசியல் வட்டாரத்தில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக இது தொடர்பான சர்ச்சை கருத்துக்களும் பதியப்பட்டு வருகின்றன.

இதனிடையே தருமபுரி பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பாஜக மாநில செயலாளர் கார்த்திகாயினி கலந்து கொண்டு கூட்டத்தில் கொங்குநாடு தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கொங்கு நாடு குறித்த பேச்சுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், கொங்குநாடு குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த அவர், அத்தைக்கு மீசை முளைக்கட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்றும் பேசினார்.