புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறப்பு இல்லை… அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி…
புதுச்சேரியில் நாளை பள்ளி – கல்லூரிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பள்ளி – கல்லூரி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, 16 ஆம் தேதி முதல் 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையும், கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுவதாக பள்ளி கல்வி துறை அதிகாரிகளுடன் பள்ளி கல்வி துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரியில் 100-க்குகீழே சென்ற கொரோனா தொற்று கடந்த இரண்டு நாட்களாக நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை என்று மாணவர்களின் பெற்றோர், அரசியல் கட்சியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக கல்வி துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், அமைச்சர் நமச்சிவாயம், துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை இன்று காலை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், மற்றும் அரசியல் கட்சிகள் கூறிய கவன ஈர்ப்புகளும் எடுத்துக் கூறப்பட்டதாக தெரிகிறது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சமர் நமச்சிவாயம், புதுச்சேரியில் நாளை முதல் பள்ளி – கல்லூரிகள் திறக்கப்படவிருந்த நிலையில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
