அரசியல்

எழுத்தாளர்களுக்கு ஊக்கத்தொகை… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்…

சிறந்த படைப்பாளிகள் 21 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

2018-2019 மற்றும் 2019-2020 ஆம் ஆண்டிற்கு தேர்வான 21 சிறப்பு படைப்புகளின் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. 21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புகளுக்காக தலா ரூ.20,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. எழுத்தாளர்கள் அறிவரசன், வசந்தா, ஆடலரசு உள்ளிட்டோருக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

கலை இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட நூலாசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்ட நிகழ்வில், அமைச்சர் கயல்விழி, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.