தமிழ்நாடு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை… 11, 12 ஆம் தேதிகளில் மழை பொளந்துகட்ட போகுதாம்…!

வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு – வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் உருவாகும் தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தெலங்கான, ஆந்திரா தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, தெலங்கானா, கடலோர ஆந்திரா, கர்நாடக உள் மாவட்டங்கள், ஏனம், கேரளா, தமிழகம், புதுவை – காரைக்காலில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்மேற்கு மற்றும் அரபிக்கடல் பகுதியில் 40 முதல் 50 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

11 மற்றும் 12 தேதிகளில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வரும் நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.