மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்… கர்நாடக முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…
மேகதாது திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்ற கருத்தை ஏற்க இயலாது என்றும் அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். மேகதாது அணை கட்டும் திட்டத்தால், தமிழகத்திற்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றும், இந்த திட்டம் தமிழக விவசாயிகளை பாதிக்காது என்றும், தமிழக அரசு சரியான மனப்பான்மையுடன் இத்திட்டத்தை எதிர்ப்பதை கைவிட வேண்டும் என்றும் கடிதத்தில் கூறியிருந்தார்.
பெங்களூரு நகரம் உட்பட கர்நாடகாவின் குடிநீர் மற்றும் உள்நாட்டு நீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய அமைக்கப்பட்ட இந்த திட்டத்தால், தமிழக விவசாய சமூகங்களின் நலன்களைப் பாதிக்காது என்றும் எடியூரப்பா கடிதத்தில் கூறியிருந்தார்.
மேக தாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று எடியூரப்பா கடிதம் எழுதியிருந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டா என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியிருந்த நிலையில் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், மேகதாது திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்ற கருத்தை ஏற்க இயலாது என்று மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகம் – கர்நாடக இடையேயான நல்லுறவு மேம்பட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக என கூறப்படும் நிலையில், வெகு தொலைவில் அணை கட்டப்பட உள்ளதாகவும், பெங்களூரு குடிநீர் தேவைக்காக அணை கட்டுவதாக கூறும் கருத்தை ஏற்க முடியாது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குடிநீருக்கு ஏற்கனவே போதிய கட்டமைப்புகள் உள்ள நிலையில், இத்திட்டத்தை ஏற்க இயலாது என்றும், தமிழ்நாடு – கர்நாடக இடையே நல்லுறவு தழைக்க ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்று கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளர்.
