ஆசைப்பட்டு ஆர்டர் செய்தது ஒரு குற்றமா? ஸ்விக்கியில் ஆர்டர் செய்த பிடித்த உணவை பிரித்து பார்த்த நடிகைக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததால் உணவு ஆர்டர் செய்த ’மூன் லைட்’ உணவகத்தின் மீதும் ஸ்விக்கி நிறுவனத்தின் மீதும் குற்றம் சாட்டியுள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் நடிகை நிவேதா பெத்துராஜ் சென்னை ஓஎம்ஆரில் உள்ள ’மூன் லைட்’ உணவகத்தில் ஸ்விக்கி மூலம் நேற்று ஃப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்துள்ளார்.
அவரின் உணவு கைக்கு கிடைத்ததுடன் பசியுடன் ஆசையாக பிடித்த உணவைப் பிரித்துப் பார்த்த நிவேதா பெத்துராஜுக்கு பேரதிர்ச்சிதான் காத்திருந்தது. உணவில் கரப்பான் பூச்சி கிடந்துள்ளது. இப்படி கரப்பான் பூச்சி கிடப்பது இது அவருக்கு முதல் முறை அல்ல. இரண்டாவது முறை.

உணவில் கரப்பான் பூச்சி கிடந்தது கண்டு கோபமடைந்த நிவேதா பெத்துராஜ், தனது இன்டாகிராம் பக்கத்தில் நேற்றிரவு, “ஸ்விக்கி நிறுவனம் மற்றும் உணவகங்கள் என்ன தரத்தை பின்பற்றுகிறார்கள் என்பது தெரியவில்லை, இதுவரை எனது உணவில் இரண்டுமுறை கரப்பான் பூச்சி கிடந்ததை பார்த்துவிட்டேன். இந்த உணவகங்களில் தொடர்ச்சியாக முறையான சோதனை நடத்தி தரமாக நடத்தப்படவில்லையென்றால் அரசு அதிக அபராதம் விதிக்கவேண்டும் என்றார் .

ஸ்விக்கி நிறுவனம் இந்த உணவகத்தை தனது பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்றும் . தயவு செய்து இந்த உணவகத்தின் மீது அனைவரும் புகாரளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
