தமிழ்நாடு

இது தான் உதாரணம்…! மற்ற மருத்துவமனைகளும் இப்படி ஆகுமா?எதிர்பார்ப்பில் மக்கள்!

தமிழகத்தில் இதுபோல் ஒரு தூய்மையான மருத்துவமனை உள்ளதா என்று அனைவரையும் ஆச்சரிய படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிறுவலூர் அரசு மருத்துவனை முன் உதாரணமாய் அமைந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் to பெருந்துறை செல்லும் வழியில் உள்ள ஓர் ஊர் சிறுவலூர் . எங்கு பார்த்தாலும் பசுமையாக காணப்படும் இந்த ஊரில் மருத்துவமனையும் அவ்வளவு தூய்மையாக காணப்படுகிறது .

இந்த மருத்துவமனை இந்த அளவுக்கு தூய்மையாக காணப்பட முக்கிய காரணம் இங்கு பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அந்த ஊர் மக்களின் நல்ல ஒத்துழைப்பும் தான் என்று மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறுகிறார்

படங்களுடன் கூடிய தூய்மை மருத்துவமனையின் சிறப்பம்சங்கள்

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனி வரிசை

செருப்பை வெளியே விட்டு விட்டு தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்

மருத்துவமனையை சுற்றிலும் அழகழகான மரம் செடி கொடிகள்

மருத்துவமனை முழுவதும் வழிகாட்டும் போர்டு

மருத்துவமனையில் மிகவும் முக்கயமான காணப்படும் சுத்தமான மருத்துவமனை படுக்கை அறைகள்

இந்த அளவுக்கு தூய்மையாக இந்த மருத்துவமனை காணப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் இங்கு தான் அதிகம் சிகிக்சைக்காக வருகிறார்கள் இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தனியார் மருத்துவமனையில் கூட இந்த அளவுக்கு தூய்மையை காண முடியாது .

இந்த ஒரு மருத்துவமனை மட்டும் இல்லாமல் தமிழகத்தில் அணைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் சிறந்த பராமரிப்புடன் தூய்மையாக இருக்க வேண்டும் என அந்த ஊர்மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்