சிவசங்கர் பாபா அறைக்கு மாணவிகளை அழைத்து செல்லும் வார்டன்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்…
சென்னை, கேளம்பாக்கம் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்த மாணவிகளிடம் பாலியல் அத்தமீறலில் ஈடுபட்ட பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தப்பிச்செல்ல முயன்ற அவரை, டெல்லியில் வைத்து சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். சிவசங்கர் பாபாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டும் பணியில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சிவசங்கர் பாபாவுக்கு மாணவிகளை அழைத்து செல்ல உடந்தையாக இருந்தவர்களிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சுஷில்ஹரி பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியைகள் பாரதி, தீபா மற்றும் சிவசங்கர் பாபாவின் சிஷ்யை சுஷ்மிதா ஆகிய 3 பேர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டள்ளனர். பள்ளியின் கணினி பிரிவு ஆசிரியர் கருணா, விடுதி வார்டன் நீரஜா, சிஷ்யை சுஷ்மிதா மீதும் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதில் சுஷ்மிதா, இதே பள்ளியில் படித்து பின்னர் சிவசங்கரின் சிஷ்யையாக இருந்து வந்துள்ளார். சிவசங்கர் பாபாவிடம் மாணவிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். அவருக்கு எவ்வாறு பணிவிடை செய்ய வேண்டும். அவரது இச்சைக்கு இணங்கும் நடவடிக்கைகள் குறித்து சுஷ்மிதா பயிற்சி கொடுத்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. சிவசங்கர் பாபா குறி வைக்கும் மாணவிக்கு, மூளை சலவை செய்து, அறைக்கு அழைத்து செல்வது வரை சுஷ்மிதாவின் பங்களிப்பு இருந்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேபோல் விடுதி வார்டனான நீரஜா, பாபா விரும்பும் நேரத்தில், மாணவிகளை அழைத்து செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இப்படி பல நேரங்களில் மாணவிகளை சிவசங்கர் பாபா சீரழித்து வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
