கைகொடுக்காத சினிமா… ‘குட்பை’ சொன்ன பிரபல நடிகை கார்த்திகா….
நடிப்பு கைகொடுக்காத நிலையில் சினிமாவுக்கு முழுக்குப்போட்டுவிட்டு, ஹோட்டல் நிறுவனத்தின் இயக்குநர் பணியை தொடங்கியுள்ளார் நடிகை கார்த்திகா.
இயக்குநர் கே.வி.ஆனந்தால், கோ படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை கார்த்திகா. பிரபல சீனியர் நடிகை ராதாவின் மகளான கார்த்திகா, கோ படத்திற்குப் பிறகு, அன்னக்கொடி, புறம்போக்கு படங்களில் நடித்தார். நடிகர் அருண் விஜய் உடன் சில வருடங்களுக்கு முன்பு நடித்த வா டீல் படம் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தியில் அர்னாப் என்கிற சீரியலிலும் கார்த்திகா நடித்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில், சினிமா வாய்ப்புக்காக கார்த்திகா காத்திருக்க விரும்பாமல் நடிப்பு குட்பை சொல்லிவிட்டு, தற்போது பொறுப்பு வகித்து வரும் யுடிஎஸ் குரூப் ஆப் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பணியையே தொடர முடிவு செய்துள்ளார். இனி சினிமா பக்கமே திரும்புவதில்லை என்று நடிகை கார்த்திகா முடிவெடுத்துள்ளாராம்.
