முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு… நோபல் பரிசுபெற்ற நிபுணர் உள்ளிட்ட 5 பேர் அமைப்பு…
முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையில் தெரிவித்தார்.
16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில், ஆளுநர் புன்வாரிலால் புரோகித் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த, முதலமைச்சருக்கு ஆலோசனை அளிக்க, முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்படும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார். இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், மாநிலத்தின் பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற இந்த அரசு உறுதி செகய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ, மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ், மத்திய அரசின் முன்னாள் நிதித்துறை செயலர் நாராயணன் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற உள்ளதாக தெரிகிறது.
பொருளாதார நிலையை ஆராய்ந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த முதலமைச்சருக்கு ஆலோசனைகளை அளிப்பார்கள் என்றும், இந்த முயற்சி அரசியல் வரலாற்றில் முதல் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
