அரசியல்தமிழ்நாடு

உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்படும்… ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையில் குறிப்பிட்டார்.

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் ஊவர் சந்தைகள் அமைக்கப்படும் என்றார்.

தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் பேசியதாவது: 100 ஆண்டுகளைக் கடந்து நிற்கம் தமிர்நாட்டின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை காலத்தை வென்று சமகநிதியை உறுதி செய்துள்ளது. தமிர்நாட்டில் வழங்கப்படும் 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும். தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும். இவ்வாறு ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.