அரசியல்இந்தியா

மாற்றத்தை விரும்பும் பஞ்சாப்.! சர்ச்சையை கிளப்பும் டெல்லி முதல்வரின் ட்விட்டர் பதிவு !

டெல்லியில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப்பிலும் பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் அங்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று அவர் (திங்கட்கிழமை) பஞ்சாப்புக்கு செல்கிறார். இதற்காக பஞ்சாபி மொழியில் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பஞ்சாப் மாற்றத்தை விரும்புகிறது. அதற்கு அம்மக்களிடம் மீதி இருக்கும் ஒரே நம்பிக்கை ஆம் ஆத்மி கட்சிதான்’’ என்று கூறியுள்ளார்.