இந்தியாகுற்றம்

100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை… வீடியோ காலில் நிர்வாணமாக நிற்கும் ஜிம் பயிற்சியாளர்…

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜிம் பயிற்சியாளர் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டெல்லியைச் சேர்ந்த விகாஸ் குமார் (30). இவர் அங்குள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக பணியாற்றுகிறார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், விகாஸ் குமார் பேஸ்புக்-ல் பின்தொடர்ந்து வருகின்றனர். பல பெண்களோடு நட்பு கொண்டு அவர்களின் செல்போன் எண்களை விகாஸ்குமார் வாங்கி வைத்துள்ளாராம்.

பல பெண்களுக்கு, பேஸ்புக் மெசஞ்சர் மூலம் ஆபாச செய்திகளையும், வீடியோக்களையும் அனுப்புவதாக கூறப்படுகிறது. நள்ளிரவில், பல பெண்களுக்கு வீடியோ கால் செய்து அவர்களிடம் நிர்வாணமாக விகாஸ் குமார் நின்றுள்ளார். பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக தளங்கள் மூலம் நட்பு கொண்டு 100-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், விகாஸ் குமார் மீது சாகர்பூர் காவல் நிலையத்தில், பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின் அடிப்படையில் டெல்லி காவல் துறையின் சைபர் செல் போலீசார் விசாரணை நடத்தினர். போலி சமூக ஊடக கணக்குகள் உருவாக்கி அதன் மூலம் பெண்களை குறிவைத்து அவர்களிடம், விகாஸ் குமார் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, விகாஸ் குமாரை, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.