சினிமா

நடிகை நதியா வெளியிட்ட அசத்தல் புகைப்படம்… இணையத்தில் வைரல்…

உலகம் முழுவதும் தந்தையர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகை நதியா, தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

1985 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நதியா. தொடர்ந்து நிலவே மலரே, உயிரே உனக்காக, ராஜகுமாரன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு, சினிமாவில் இருந்து விலகிய நதியா, மீண்டும் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சமி படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது திரிஷ்யம் – 2 தெலுங்கு படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகை நதியா, தனது டுவிட்டர் பக்கத்தில், தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அப்பா, மகிழ்ச்சியான தந்தையர் தின வாழ்த்துக்கள். உங்களுடைய அன்பு மற்றும் அக்கறைக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த டுவிட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.