கடந்த ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை… அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு…
கடந்த ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் சரிவர நடைபெறாத காரணத்தால்தான் மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும், இது படிப்படியாக சீர்செய்யப்படும் என்றம் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், பராமரிப்பு பணி தடையால்தான் மின்தடை ஏற்பட்டுள்ளது என்பதை முன்னாள் அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
காற்றாலை மின்சாரம் உள்ளபோது எப்படி மின்சாரம் தடைபடும் என்று கேட்கிறார்கள்; காற்றாலை செயல்பட்டாலும் முறையான பராமரிப்பு இல்லாதபோது அதை எப்படி பயன்படுத்த முடியும் என்றும், எப்படி மின் சப்ளை செய்ய முடியும் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
கடந்த 9 மாதகாலமாக, கடந்த அதிமக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் பராமரிப்பு பணிகள் விரைவில் சீரமைக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
