அமெரிக்காவுடன் மோத தயாராக வேண்டும்..! வடகொரிய படைகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்ததாக தகவல்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்துடன் முழு அளவிலான மோதலுக்க்கு தயாராக வேண்டும் என்று தனது படைகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் நிர்வாகத்தில் கொள்கை போக்கிற்கு பதிலடியாக வடகொரியா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்த கிம் ஜாங் உன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மற்றும் மோதல் என இரண்டுக்கும் தயாராக வேண்டும் எனக் கூறியதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் : அமெரிக்காவுடன் மோதலுக்கு முழு அளவில் தயாராக இருக்க வேண்டும் என கிம் கூறியதாகவும், நாட்டின் கண்ணியம் மற்றும் நலனை பாதுகாக்கவும் சுதந்திரமான வளர்ச்சி மற்றும் அமைதியான சூழல், நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இத்தகைய தயார் நிலைகள் மிகவும் அவசியம் என வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2019- ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் – கிம் ஜாங் உன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அனால் , அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது .
