விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு

கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஆண்டு நடைபெற இருந்த 32-வது ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 8-ம் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில் தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட இருக்கும் இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சிறந்த அனுபவத்தையும், நல்ல விளையிட்டு திறனும் கொண்டுள்ள 16 பேர் கொண்ட இந்திய அணியில் 8 வீராங்கனைகள் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் விளையாடியவர்கள். 8 வீராங்கனைகளுக்கு இது முதலாவது ஒலிம்பிக் போட்டியாகும்.

இந்திய அணியின் கேப்டனாக ராணி ராம்பால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பெண்கள் அணி ஒலிம்பிக் போட்டியில் அடியெடுத்து வைப்பது இது 3-வது முறையாகும். ஏற்கனவே இந்திய அணி 1980, 2016-ம் ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது .

இந்திய அணி வீராங்கனைகள் தற்போது பெங்களூருவில் உள்ள சாய் பயிற்சி மையத்தில் தீவீர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி :

கோல்கீப்பர்: சவிதா, பின்களம்: தீப் கிரேஸ் எக்கா, நிக்கி பிரதான், குர்ஜித் கவுர், உதிதா, நடுகளம்: நிஷா, நேஹா, சுஷிலா சானு, மோனிகா, நவ்ஜோத் கவுர், சலிமா டெடி, முன்களம்: ராணி ராம்பால், நவ்னீத் கவுர், லால்ரெம்சியாமி, வந்தனா கட்டாரியா, ஷர்மிளா தேவி.