குழந்தைகளை பாபா தொடுவது நல்ல ‘டச்’ தான்… சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் பேட்டி…
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளியில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் எழுந்தது. இதையடுத்து, தப்பிச்செல்ல முயன்ற சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் வளைத்து பிடித்து, சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், சுஷில் ஹரி பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் இருந்து விலகி வருகின்றனர். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தற்போது, சஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய அவர்கள், சிவசங்கர் பாபா பள்ளி குழந்தைகளைக் கட்டிப்பிடிப்பார் என்றும் அது நல்ல தொடுதால்தான் என்றும், இரண்டு தரப்பிலும் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

நான் கிருஷ்ணர், நீங்கள் எல்லாம் கோபியர்கள் என்று மாணவியரைப் பார்த்து சிவசங்கர் பாபா கூறியதாக வந்துள்ளது முற்றிலும் பொய் என்றும் ஆசிரியர்கள் கூறினர்.
