அரசியல்இந்தியா

உலக தலைவர்களில் மோடிதான் எப்போதும் ஃபர்ஸ்ட்…

இந்தியாவில் கொரோனா இரண்டாவது கட்ட அலை இருந்தபோதிலும் உலக தலைவர்களில் பிரதமர் நரேந்திரமோடிதான் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

சர்வதேச கருத்து கணிப்பு ஏஜென்சி, மார்னிங் கன்சல்ட், அண்மையில் சர்வதேச அளவில் பிரபலமான தலைவர்கள் குறித்து கருத்து கணிப்பு நடத்தியது. ஆய்வின் முடிவில் பல ருசிகரமான தகவல்கள் கிடைத்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமட்ர போரீஸ் ஜான்சன் உள்ளிட்ட சக உலக தலைவர்களைக் காட்டிலும் மிகவும் பிரபலமான உலக தலைவராக பிரதமர் மோடி உள்ளது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக 66 சதவிகித ஒப்புதல் மதிப்பீட்டுடன் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.

பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தல் இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகியும், 65 ஒப்புதல் மதிப்பீட்டுடன் உள்ளார். மெக்கன்சி அதிபர் லோபஸ் ஓப்ரடோர் 63 சதவிகித மதிப்புடன் 3-வது இடத்திலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 6-வது இடத்தில் உள்ளார்.

கடந்த 7 ஆம் தேதி அன்ற நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றிய பிறகு அவரது ஒப்புதல் மதிப்பீடு அதிகரித்துள்ளது ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.