ஸ்பெயினில் நடந்த கொடூரம்..! பெற்ற தாயை துண்டு துண்டாக வெட்டி…சமைத்து சாப்பிட்ட கொடூர மகன்!
ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பர்ட்டோ சான்ஸ் கோமஸ் இவருக்கு வயது 28 . இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 60 வயதான தனது தாயுடன் ஏற்பட்ட தகராறின் போது, பெற்ற தாய் என்றும் பாராமல் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் .
கொலை செய்தும் கொலைவெறி அடங்காத அந்த கொடூர மகன் தனது தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு வைத்துள்ளார் . 2 வாரங்களுக்குப் பிறகு அந்த உடல் பாகங்களில் சிலவற்றை அவர் சமைத்து சாப்பிட்டார். மேலும் தனது நாய்க்கும் அதனை உணவாக அளித்துள்ளார் .
இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆல்பர்ட்டோ தாயின் நெருங்கிய தோழி ஒருவர் தனது தோழியை நீண்ட நாட்களாக காணவில்லை என போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து ஆல்பர்ட்டோவின் வீட்டுக்கு சென்ற போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பிளாஸ்டிக் டப்பாக்களில் பெண்ணின் உடல் பாகங்கள் இருப்பதைக் கண்டு சற்று நேரம் போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர் .
இதையடுத்து ஆல்பர்ட்டோவை கைது செய்த போலீசார் அவனிடம் தீவிரமாக விசாரித்தபோது அணைத்து உண்மையும் தெரியவந்தது. இந்தநிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று மாட்ரிட் கோர்ட்டில் நடந்தது. விசாரணையின்போது ஆல்பர்ட்டோ, கொலை நடந்த சமயத்தில் தான் மன நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறினார்.
ஆல்பர்ட்டோவின் பேச்சை ஏற்க மறுத்த நீதிபதி ஆல்பர்ட்டோவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
தாயிடம் ஏற்பட்ட தகராறில் பெற்ற மகனே தாயை கொன்று அவரை துண்டு துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்ட சம்பவம் ஸ்பெயினில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
