ரொனால்டோவை தொடர்ந்து பீர் பாட்டிலை அகற்றிய பிரபல கால்பந்து வீரர்… வைரலாகும் விடியோ…!
தனக்கு முன்பிருந்த கொக்கோ கோலா பாட்டிலை கிறிஸ்டியானோ ரொனால்டோ தள்ளி வைத்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், தற்போது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் பால் போக்யா வீரரின் செயல் தற்போது பிரபலமாகி வருகிறது.
போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தனக்கு முன்பிருந்த கொக்கோ கோலா பாட்டிலை தள்ளி வைத்தார். அவரது இந்த செயல் கொக்கோகோலாவின் விற்பனையை வெகுவாக சரிய வைத்தது. அது மட்டுமல்லாமல் அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து, அதன் பெயரை உச்சரித்துவிட்டு வைத்தார். அடுத்த சில நிமிடங்களில் பங்கு சந்தையில் கொக்கோ கோலாவின் பங்கு மதிப்பு 56.10 டாலரில் இருந்து 55.22 டாலராக குறைந்தது. 4 பில்லியன் டாலர் அளவுக்கு அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் பார்க்கும்போது 29 ஆயிரம் கோடியாகும்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவைத் தொடர்ந்து, மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் விளையாடும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் பால் போக்பாவின் செயல் தற்போது பிரபலமாகி வருகிறது. போட்டிக்கு முன்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, தனக்கு முன்பிருந்த ஹெனிக்கென் பீர் பாட்டிலை கண்ணில் படாதவாறு வைத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பால் போக்பா-வின் செயல் எந்த மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
