சினிமா

அற்ற வயிறும் இற்ற உயிரும் எத்துணையோ? சற்றே உதவுங்கள்..! ட்விட்டர் பதிவு மூலம் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்!

உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய பெருந்தொற்று பாரபட்சமின்றி அணைத்து உயிர்களையும் வேட்டையாடி வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாம் அலையின் தாக்கம் சற்று அதிகாகமாகவே உள்ளது .இந்நிலையில் இரண்டாம் அலையின் தாக்கத்தை குறைக்க தமிழக அரசு கடுமையான ஊரடங்கை பிறப்பித்தது .

ஊரடங்கினால் வருமானம் இன்றி கஷ்டப்படுவோருக்கு உதவ அரசு குடும்ப அட்டைகள் மூலம் ரூ.4 ஆயிரம் உதவிப்பணம் வழங்குகிறது. உணவுப் பொருட்களையும் வழங்கி வருகிறது. பல தொண்டு நிறுவனங்களும் உணவு பொருட்களை வழங்குகின்றன.இதுபோக பல அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் இன்னும் கண்ணனுக்கு தெரியாத பல மக்கள் அவர்களால் முடிந்தது செய்து வருகின்றனர் .

இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவும் உதவிகள் வழங்கி உள்ளார். அனைவரும் உதவி செய்யும்படி வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

இதுகுறித்து வைரமுத்து விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் கூறிருப்பதாவது :

‘’ஊரடங்கில் பூவும் வாழ்வும் வாடிப்போன பூக்காரிகள் சிலருக்குப் பொருள் கொஞ்சம் கொடுத்தேன். பண்புடையீர் உங்களைச் சூழ்ந்திருக்கும் சமூகத்தை ஆழ்ந்து பாருங்கள். அற்ற வயிறும் இற்ற உயிரும் எத்தனையோ? சற்றே உதவுங்கள். சிற்றுதவிக்கும் செழும்பயனுண்டு. சிற்றெறும்புக்கும் சிறுவயிறுண்டு” என்று கூறியுள்ளார்.