ஆடியோ அரசியல் செய்யும் சசிகலா…! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!
அதிமுகவை பிரித்தாள நினைக்கும் சசிகலாவின் முயற்சி எப்போதும் எடுபடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஊழல் வழக்கில் கைதாகி பின்னர் விடுதலை பெற்று அண்மையில் வெளிவந்தார் சசிகலா .இந்நிலையில் சற்று நாட்கள் அமைதியாக இருந்தவர் தற்போது ஆடியோ மூலம் அதிமுகவை கைப்பற்ற நினைப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறப்படுகிறது .

இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சசிகலா ஆடியோ அரசியல் செய்வதாக தெரிவித்தார்.
சசிகலாவின் இந்த பிரித்தாளும் முயற்சி எபோதும் எடுபடாது எனக் கூறிய அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் தான் புகழேந்தி நீக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.
