கோவத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிக்கு நடந்த கொடூரம்..! பெற்றோர்களுடன் சண்டைபோடும் சிறுமிகளுக்கு இந்த சம்பவம் ஒரு பாடம்!
லக்னோவில் பெற்ற தாயுடன் ஏற்பட்ட சிறு சண்டையின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி வேலை தேடிய 14 வயது சிறுமியை 6 பேர் கொண்ட கொடூர கும்பல் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தாயுடன் ஏற்பட்ட சிறு சண்டையின் காரணமாக கோவத்தில் வீட்டை விட்டு வெளியேறி சென்று தனியாக வேலை பார்த்து வாழலாம் என்ற எண்ணத்தில் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார்.
மும்பைக்கு வேலைக்கு செல்லும் திட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி மும்பைக்கு எப்படி செல்வது என தெரியாமல் திகைத்துப்போய் நின்றுகொண்டிருக்கிறார் .
சார்பாக் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து மும்பைக்கு ரயிலில் சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் மடியோன் வந்த சிறுமி, ரயில் நிலையத்துக்கு எப்படி செல்வது என அங்கிருந்தவர்களிடம் வழிகேட்டுள்ளார். இதனைப் பார்த்த இ-ரிக்ஷா ஓட்டுனரான இக்ரம்தீன் என்ற கொடூரன் சிறுமியை அணுகி தனியாக இங்கு என்ன செய்கிறாய் என பாசமாக விசாரித்திருக்கிறார்.
இக்ரம்தீன் பாசமாக பேசியதால் அவரை நம்பி நடந்தது கூறிருக்கிறார் தான் மும்பைக்கு வேலைக்காக செல்ல திட்டமிட்டிருப்பதையும் வீட்டை விட்டு வெளியே வந்ததையும் அச்சிறுமி அந்த கொடூரனிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் கதையை கேட்ட எந்த கொடூரன் இதே ஊரிலேயே உனக்கு வேலை வாங்கித்தருகிறேன் என உறுதியளித்து மடியோன் பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளான் . பின்னர் அன்று மாலை நண்பர்களை தொலைபேசியில் அழைத்து வீட்டுக்கு வரச்சொன்ன இக்ரம்தீன் அந்த 14 வயது சிறுமியை அடித்து துன்புறுத்தி நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர்.
எந்த கொடூரர்கள் மீண்டும் வேறு ஒரு கிராமத்துக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்தும் சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியிருக்கின்றனர்.
இதற்கிடைத்தில் சிறுமியை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் சிறுமியை தேடி கண்டுபிடித்தனர் .
சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய இக்ரம்தீன், அவரின் நண்பர்கள் நசீம், ஷகீல், நூர் முகமது, உத்தம் சர்மா, ரிதேஷ் யாதவ் ஆகிய 6 பேரை கைது செய்த காவல்துறையினர் அனைவர் மீதும் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் 23 முதல் 27 வயதுடையோர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிறிய காரணங்களுக்காக பெற்றோர்களிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் சிறுமிகளுக்கும் .குழந்தைகள் என நினைக்கிறார்கள் என்று அறியாமல் அவர்களிடம் கோபத்தை காட்டும் பெற்றோர்களுக்கும் இந்த சம்பவம் ஒரு பாடம்.
