தமிழ்நாடு

பாரபட்சமின்றி வாங்கிக்குடித்த மதுபிரியர்கள்…! தமிழகத்தில் ஒரே நாளில் 165 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் 165 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுக்கடைகள் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்தன. தற்போது தொற்றுப்பரவல் சற்று குறையத் தொடங்கிய நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன.

Tamil Nadu: Murder of Tasmac employee triggers protests in Krishnagiri and  Dharmapuri, protesters demand action against accused - India News

மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து அவரவருக்கு பிடித்த மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.மேலும் மதுக்கடை திறந்தவுடன் மதுகுடிப்போர், மதுபானத்திற்கு தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டியும் பயபக்தியுடன் மதுவை வணங்கி, மதுபாட்டிகளை வாங்கிச் சென்றனர்.

எந்த இடத்தில் எவ்ளோ மது விற்பனை :

  • சென்னை மண்டலம் 43 கோடி
  • திருச்சி மண்டலம் 33 கோடி
  • மதுரை மண்டலம் 49 கோடி

சேலத்தில் 38 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.