சினிமா

குண்டாக இருப்பதால் அவமானப்படுத்தப்பட்டேன்… நடிகை பிரியாமணி வருத்தம்…

நடிகை பிரியாமணியின் நடிப்பு அழகும் பலராலும் பாராட்டபட்டாலும், சினிமா துறையில் தான் சந்தித்த இன்னல்கள் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார். நடிகை பிரியாமணியின் இந்த பேச்சு, அவரது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்னதான் பிரியாமணி பேசியிருந்தார்?

பருத்திவீரன் படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்று முன்னணி நடிகையாக உயர்ந்த பிரியாமணி, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில்தான் சினிமாவில் தான் சந்தித்த இன்னல்கள் பற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தான் சினிமாவில் முன்னேறியது பற்றி பேட்டியில் அவர் தெரிவித்ததாவது: சினிமா துறை போட்டி நிறைந்தது. நான் சினிமாவுக்கு வந்த புதிதில் கடினமாக உழைத்து மெதுவாக முன்னேறினேன்.

நேர்மையாக உழைத்தால் என்றாவது வெற்றி வரும். திருமணம் எனக்கு நடிக்க தடையாக இல்லை. கணவர் உதவியாக இருப்பதால் தொடர்ந்து நடிக்க முடிகிறது. திருமணத்துக்கு பிறகுதான் அதிக வாய்ப்புகள் வருகிறது. திருமணமான காஜல் அகர்வால், சமந்தா போன்றோர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சீனியர் நடிகையான நயன்தாராவும் நல்ல கதைகளில் நடிக்கிறார். திருமணம் ஆனவர் ஆகாதவர் என்ற வித்தியாசம் சினிமாவில் இல்லை.

திறமை இருந்தால் ஜெயிக்கலாம். எனக்கு வயதாகிவிட்டது என்றும் குண்டாக இருக்கிறேன், கருப்பாக இருக்கிறேன் என்றும் விமர்சிக்கின்றனர். அப்படி பேசுவது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. யாரையும் தரம் தாழ்த்தி பேசாதீர்கள். கருப்பும் அழகுதான். இவ்வாறு நடிகை பிரியாமணி தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.