அமெரிக்காவின் பிரபல ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து..!
அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில் அந்நாட்டின் மிகப்பெரிய ரசாயன தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பலகோடி ரூபாய் மதிப்பில் பொருட்செதம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது .
சிகாகோவின் வடமேற்கில் இல்லினாய்ஸ் மாகாணத்தில் ராக்டன் நகரில் கேம்டூல் என்ற ரசாயன நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு அனைத்து விதமான இன்ஜின் ஆயில்கள், கிரீஸ் வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அமெரிக்க நாட்டு நேரப்படி காலை 7 மணி அளவில் திடீரென ரசாயன ஆலையில் தீ பற்றியது. ஆலையின் கூரையில் பற்றிய தீ சிறிது நேரத்தில் மொத்த ஆலையையே தீக்கிரையாகியது . கொழுந்துவிட்டு எரிந்து வரும் தீயால் வானில் பல அடி உயரத்திற்கு புகை எழும்பி வருகிறது.
தகவல் அறிந்து விரைந்து வந்த ராக்டன் நகர தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் பணி செய்துவந்த 70 தொழிலாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், ஒருசிலருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டதாகவும் தீயணைப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
