கள்ளக்காதலைக் கண்டித்த மனைவி கொடூர கொலை… கணவன் கைது…
கடலூரில், கள்ளக்காதலைத் தட்டிக்கேட்ட மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், கீழ்புவனகிரியைச் சேர்ந்தவர் கரிகாலன். இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களுக்கு திருமணமான ஒரு பெண்ணும், திருமண வயதில் ஒரு பெண்ணும் உள்ளனர்.
கரிகாலனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும், தவறான தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் – மனைவியரிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. நேற்றும் கணவன் – மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கரிகாலன், வீட்டில் இருந்த கத்தியால், மனைவி பச்சையம்மாளின் கழுத்தை அறுத்து விட்டு தப்பியோடியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பச்சையம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பச்சையம்மாளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கரிகாலனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
