தமிழ்நாடு

சிங்கங்களுக்கு ஆப்பு வைத்த தெரு நாய்கள்!

தமிழகத்தில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படத் தெரு நாய்களும் காரணமாக இருக்கலாம் என்று அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.

ஜூன் 12 ஆம் தேதி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 10 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் ஒரு பெண் சிங்கம் கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தது.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு சிங்கத்திற்கு அதிகம் பரவக்கூடிய கெனையின் டிஸ்டெம்பர் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

சிங்கத்திற்கு கொரோனா தொற்று ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பாகத் தமிழக கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குநர் ப. கணேஷன் கூறுகையில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படப் பூனைகள் காரணமாக இருக்கலாம். இது தொடர்பாக ஒரு முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக வண்டலூர் பூங்காவின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் :

‘சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படத் தெரு நாய்களும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இதுவரை சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் சரியான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை.

இதையடுத்து வண்டலூர் உயிரியல் பூங்காவின் சுற்று வட்டாரத்தில் உள்ள தெரு நாய்களையும் , பூனைகளையும் தொடர்ந்து அப்புறப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .