அரசியல்தமிழ்நாடு

நோயாளிகளுக்கு அளித்த ‘உணவின் விலை ஒப்பீடு’ பொருந்தாது… அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு சி.விஜயபாஸ்கர் மறுப்பு…

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஓராண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட உணவின் விலைக்கும் தற்போது வழங்கப்படும்உணவின் விலைக்கும் ஒப்பீடு செய்வது பொருந்தாது என்று மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது கொரோனா சிகிச்சை மையங்களில் மருத்துவர், செவிலியர், நோயாளிகள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் தங்கம் இடம் அளிக்கப்பட்டதில், முறைகேடு நடந்ததாக மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியிருந்தார். மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட தங்கும் இடங்கள்ம், மற்றும் உணவில் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் ரூபாய் மிச்சப்படுத்தப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். இந்த தொகை மாதத்திற்கு 9 அல்லது 10 கோடி ரூபாய் இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியனின் இந்த குற்றச்சாட்டுக்கு, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஓராண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட உணவின் விலைக்கும் தற்போது வழங்கப்படும் உணவின் விலைக்கும் ஒப்பீடு செய்வது பொருந்தாது என்றார். நோயாளிகள் நலன்தான் நமக்கு முக்கியம். அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களும் மருத்துவ கல்லூரி டீன்கள் ஆகியோரின் முழுமையான கண்காணிப்பில், நோயாளிகளுக்கு தரமான உணவை வழங்கும்படி அறிவுறுத்தினோம். அதன்படி அரசு நிர்ணயித்துள்ள தொகைக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தோம் என்று சி.விஜயபாஸ்கர் கூறினார்.