தடுப்பூசி போடுங்கன்னு சொல்றாங்க… தடுப்பூசி இல்லன்னும் சொல்றாங்க… பொதுமக்கள் ஆவேசம்…
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி இல்லாததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி போட்டக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால், தடுப்பூசி இல்லை என்ற திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். சில இடங்களில் தடுப்பூசி இல்லை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தடுப்பூசி முன்பதிவு செய்து கொள்ளும் அலைபேசிக்கு தொடர்பு கொண்டால் அவை சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தடுப்பூசி இல்லை என்பது குறித்து முறையான அறிவிப்பு இல்லாததால் பொதுமக்கள் அலைந்து திரியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி போடுங்கன்னு சொல்றாங்க… ஆனால் தடுப்பூசி இல்லன்னும் திருப்பி அனுப்புறாங்க… என்று பொதுமக்கள் கோபத்துடன் கூறி செல்வதை கேட்க முடிகிறது. தடுப்பூசி இல்லை என்ற நிலையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
