ம.நீ.ம கட்சியிலிருந்து விலகிய மகேந்திரன்…! இன்று கெத்தான பதிவில் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் !
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நிதி மய்யம் கட்சி போட்டியிட்டது. ஆனால் அந்த கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
தேர்தல் தோல்வியின் எதிரொலியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த ஆர்.மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகினார். இதுகுறித்து அவர் கூறுகையில் கட்சி வெளிப்படைத்தன்மை இல்லாமல், ஜனநாயக விரோத முறையில் செயல்பட்டு வருவதாகவும், கமல் ஒரு சில நபர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்றும் மகேந்திரன் குற்றம் சாட்டினார்.
கட்சியில் இருந்து மகேந்திரன் விலகியதும், பொதுச்செயலர் குமாரவேல், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து விலகினர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் திமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவருக்கு தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி கழகத்தில் (TIDCO) முக்கியப் பொறுப்பு வழங்க திமுக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு மகேந்திரன் இன்று செல்லவுள்ளதாகவும், அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
