அரசியல்தமிழ்நாடு

“இது ட்ரெய்லர்தான்… இனிதான் மெயின் பிக்சர்”… அமைச்சர் சேகர் பாபு அதிரடி…!?

தமிழக அரசு 30 நாள் நிறைவு செய்துள்ளது என்றும் இது டிரெய்லர்தான் என்றம், இனிமேல்தான் மெயின் பிக்சர் பார்ப்பீர்கள் என்று அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

வடபழனி கோயிலுக்கு சொந்தமான 250 கோடி ரூபாய் மதிப்புள்ள 5.5. ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. கோயில் நிலம் மீட்கப்பட்ட இடங்களில் அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு 30 நாள் நிறைவு செய்துள்ளது. இது டிரைலர்தான்; இனிதான் மெயின் பிக்சர் பார்ப்பீர்கள் என்றும், யார் தவறு செய்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர் கூறினார்.

தடைபட்டிருந்த இந்த இடமானது முழுக்க சமுதாயம் சார்ந்து ஏழை எளியவர்கள் பயன்படுகின்ற வகையில் சமுதாய நோக்கத்தோடு இதை பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அனைவரும் கலந்து ஆலோசித்து இந்த இடத்தில் ஏழை மக்கள், அடிதட்டு மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்கள், பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் மேம்படுவதற்கான திட்டம் நிச்சயம் இந்த இடத்தில் செயல்படுத்தப்படும் என்றும் அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை 100 நாட்களில் செயல்படுத்துவோம் என்ற அமைச்சர், இந்து சமய அறநிலைத்துறை சொத்துக்களை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் மீட்போம் என்றார். தமிழ்நாட்டில் பாஜக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பல்வேறு விமர்சனங்களை செய்து வருவதாகவும் அமைச்சர் சேகர் பாபு கூறினார்.