Thiruparangundram

tamilnaduதமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை…

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. கடந்த நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தினத்தன்று தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த போதிலும், வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்ட நிலையில், உத்தரவை நிறைவேற்றத் தவறியதாகக் கூறி அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான குழுவுக்குக் கோயில் நிர்வாகம் அதிகாரம் அளிக்காததால் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்த மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, நிலை அறிக்கை தாக்கல் செய்து மனப்பூர்வமாக மன்னிப்புக் கோரினார்

• கார்த்திகை தீபத் திருநாளான நவம்பர் 24 அன்று திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்த நிலையில், வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டதாகக் கூறித் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
• மதுரையைச் சேர்ந்த அழகர்சாமி என்பவர் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாகவும், தீப மண்டபத்தில் எரியும் தீபத்திலிருந்து தீபத்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்ய கோவில் நிர்வாகம், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
• மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என நவம்பர் 25 அன்று கோவில் பட்டர்கள் இந்து சமய அறநிலையத் துறைக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
• மறுநாள் வெளியான மற்றொரு கடிதத்தில், சைவ சமய நெறிமுறைகளின்படி உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் தீபம் ஏற்றியது சரியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
• பட்டர்களுக்கு நெருக்கடி கொடுத்து மறுப்புக் கடிதம் பெறப்பட்டதாக இந்து அமைப்புகள் விமர்சித்துள்ள நிலையில், எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை எனத் தலைமைப் பட்டர் ராஜா தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
கோவிலின் மரபுப்படியும் சம்பிரதாயப்படியும் கார்த்திகை தீப நாளில் தீபம் ஏற்றியிருக்கிறோம். தீபம் ஏற்றுவது தொடர்பாக ஆண்டுதோறும் அமைதிக் குழு போட்டு தீபம் ஏற்றுவது தொடர்பாக எங்களிடம் கருத்து கேட்பார்கள்” என்கிறார்.

கோவிலின் மரபுப்படி சுவாமியின் சிரசுக்கு மேல் தீபம் ஏற்றுவது சம்பிரதாயம் எனவும் கோவிலின் சமய நடைமுறையாக இது உள்ளதாக தாங்கள் கூறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

‘தீபம் ஏற்றுவது தொடர்பாக பட்டர்களிடம் ஆலோசிக்கவில்லை’ எனக் கூறும் கடிதம் வெளியானது குறித்துக் கேட்டபோது, “தீபம் ஏற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் மரபுப்படி செயல்படுத்த வேண்டும். அதனை செயல்படுத்தியுள்ளோம்” எனக் கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் பட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக, இந்து அமைப்பினர் கூறுவது குறித்துக் கேட்டபோது, “எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை” என்று ராஜா பட்டர் விளக்கம் அளித்தார்.

Read More